×

நகை வாங்குவோர் ஷாக்..!! தங்கம் விலை கிடு கிடு உயர்வு..!! 

 

தங்கம் விலை தொடர் உயர்வை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மற்ற நாடுகளில் தங்கம் ஒரு முதலீடாக இருக்கிறது. ஆனால் நமது நாட்டில் உணர்ச்சிகளோடு கலந்திருக்கிற ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது.

இங்கு திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் தங்கம் முக்கியத்துவம் பெறுகிறது. இதனாலேயே உலகளவில் அதிக தங்கம் வாங்கும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.

தற்போது உயர்ந்து வரும் தங்கம் விலை நகை வாடிக்கையாளர்களை சோகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆனால் விநாயகர் சதுர்த்தி தொடங்கி தீபாவளி வரை அடுத்தடுத்த பண்டிகைகள் வருவதால் இனிவரும் நாட்களில் தங்கம் விலை உயரத் தான் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள்.

இன்று (ஆகஸட் 22) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.800 உயர்ந்து, ரூ.1,19,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.100 உயர்ந்து ரூ.14,950-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனையாகிறது