நகை வாங்குவோர் ஷாக்..!! தொடர்ந்து உயரும் தங்கம் விலை..!!
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏறி இறங்கி வருகிறது. இதனால் நகை வாடிக்கையாளர்களும், முதலீட்டாளர்களும் எப்போது நகை வாங்கலாம்? முதலீடு செய்ய ஏற்ற நேரம் இதுவா? என்ற கேள்விகளுடன் இருக்கின்றனர். ஆனால், தற்போதைய உலகளாவிய சூழ்நிலையை பார்க்கையில், தங்கம் விலை கணிக்க முடியாத வகையில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனினும், அமெரிக்க டாலர் மதிப்பு வலுப்பெற்று வருவதால் தற்போதைக்கு அதன் மதிப்பு குறைய வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர். இதனால் தங்கம் விலை மேலும் குறையவே சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர்.
இந்த கருத்து ஒருபுறம் இருந்தாலும், பாதுகாப்பான முதலீடான தங்கத்தை மத்திய வங்கிகள் அதிகளவில் வாங்கி வருவதால் பெருமளவில் விலை குறையாது என்றும் கூறுகின்றனர். இதனால் தங்கம் விலையின் ஏற்ற இறக்கம் கணிக்க முடியாத வகையில் இருக்கிறது.
ஆபரணத் தங்கம் நேற்று ஒரு கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.13,230-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.13,255-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,06,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே போல் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கு 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.800 வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 உயர்ந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போது 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பே ரூ.95.37 காசுகளாக உள்ளது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஜூலை 30: 1 கிராம் - ரூ.13,230 1 சவரன் ரூ.1,05,840
ஜூலை 29: 1 கிராம் - ரூ.13,155 1 சவரன் ரூ.1,05,240
ஜூலை 28: 1 கிராம் - ரூ.13,215 1 சவரன் ரூ.1,05,720
ஜூலை 27: 1 கிராம் - ரூ.13,370 1 சவரன் ரூ.1,06,960
ஜூலை 26: 1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400