நகை வாங்குவோர் ஷாக்..!!தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக உயர்ந்தது..!!
மேற்காசிய போர் பதற்றம் காரணமாக தங்கத்தின் விலையில் தனசரி பெரியளவில் மாற்றம் இருந்து வருகிறது. ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்திற்கு மேல் இருந்த நிலையில், படிப்படியாக குறைந்து ரூ.13 ஆயிரத்திற்குள் வந்தது. எனினும், அவ்வப்போது சற்று விலை அதிகரித்து, ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.
தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஓரளவு போர்ப்பதற்றம் குறைந்துள்ளதால் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் திரும்ப தொடங்கியுள்ளது. தங்கம் விலை இன்று விலை சற்று அதிகரித்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக சவரனுக்கு 800 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,10,800க்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,11,600க்கு விற்கப்படுகிறது.
மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.100 உயர்ந்து ரூ.13,950 க்கு விற்கப்படுகிறது.
அதே போல வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.255க்கும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.