×

நகை வாங்குவோர் ஷாக்..!! தொடர் உயர்வில் தங்கம் விலை..!!

 
ஒரு வார காலமாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. போரின் தாக்கத்தால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் தட்டுபாட்டை சமாளிக்க, பல நாடுகள் தங்களிடம் இருந்த தங்கத்தை விற்க தொடங்கின. இதனால் சந்தையில் அதன் மவுசு குறையத் தொடங்கியது. அதன் எதிரொலியாக விலையும் குறைந்தது.
ஆனால், தங்கள் நாட்டை தாக்கும் நாடுகளை தவிர, மற்ற நாடுகளின் ஹார்முஸ் நீரிணை திறக்கப்படும் என்று ஈரான் அறிவித்ததால், பல்வேறு நாடுகளின் கப்பல்கள் எண்ணெய் மற்றும் எரிபொருளுடன் தங்கள் நாடுகளை நோக்கி சென்ற வண்ணம் உள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தின் மீது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டுவருகிறது.
சென்னையில் இன்று (மார்ச் 27) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.13,430க்கும், ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,07,440க்கும் விற்பனையாகிறது.

நேற்று காலை தங்கம் விலை அதிகரித்து மாலையில் குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.245க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து ரூ.2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.