நகை வாங்குவோர் ஷாக்..!! தொடர் உயர்வும் தங்கம் மற்றும் வெள்ளி விலை..!!
தங்கத்தைபொறுத்தவரை கடந்த 20 வருடங்களில் 22 மடங்கு வரை ஏறிவிட்டது. தங்கம் போல் அதிகப்படியான முதலீட்டு லாபம் ஏதாவது கொடுத்திருக்கிறதா என்றால் அது ரியல் எஸ்டேட்டை கூறலாம். ஆனால் ரியல் எஸ்டேட்டில் ரிஸ்க் அதிகம். சற்று கவனம் இல்லாமல் போனால் மொத்தமாக காலியாகிவிடும். அதேபோல் அவசரத்திற்கு விற்று வெளியேறினால் அடிமாட்டு விலைக்குத்தான் போகும். அதனால் ரியல் எஸ்டேட் கூட லாபம் பெரிதாக இருக்காது.
ஆனால் தங்கம் அப்படி இல்லை.. நம்பவே முடியாத அளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கொரோனாவிற்கு பிறகு தங்கம் விலை அடியோடு உயர்ந்துவிட்டது. தங்கம் விலை வெறும் ஒரே ஆண்டில் 75 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில், இன்று (டிச.20) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,400க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.99,200க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.226க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,26,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.