×

JEE தேர்வைத் தமிழில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : டிடிவி தினகரன் அறிக்கை!

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான JEE Main என்ற தேர்வை நடத்தி வருகிறது. மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான JEE Main என்ற தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வு ஆங்கிலம், ஹிந்தி மற்றும் குஜராத்தி மொழியில் நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ மத்திய அரசின் JEE Main தேர்வைத் தமிழ் மொழியிலும் நடத்திட வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகளை பழனிசாமி
 

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான JEE Main என்ற தேர்வை நடத்தி வருகிறது.

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான JEE Main என்ற தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வு ஆங்கிலம், ஹிந்தி மற்றும் குஜராத்தி மொழியில் நடத்தப்பட்டு வருகிறது. 

இது குறித்து அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ மத்திய அரசின் JEE Main தேர்வைத் தமிழ் மொழியிலும் நடத்திட வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகளை பழனிசாமி அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மட்டுமே நடத்தப்பட்டு இந்த தேர்வை, குஜராத் மாநில அரசு குஜராத்தி மொழியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததால் தேசிய தேர்வு முகமை அதற்கு ஒப்புதல் அளித்தது. அதனால், தற்போது குஜராத்தி மொழியிலும் அந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற கனவு இன்னும் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. இதனால், அடுத்த ஆண்டு வரவிருக்கும் அந்த தேர்வைத் தமிழ் மொழியில் நடத்தும் படி எடப்பாடி பழனிசாமி வழிவகை செய்ய வேண்டும். இதன் மூலம், உயர்கல்வி நிறுவனங்களில் குறைந்த அளவிலே படிக்கும் தமிழ் மாணவர்களின் நிலையை மாற்ற முடியும்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.