×

“முதல்வரோ அமைச்சர்களோ பட்டமளித்திருந்தால் வாங்கியிருப்பேன்”- ஜீன் ஜோசப்

 

தமிழ்நாட்டிற்கும், தமிழுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார் என ஆளுநரிடம் பட்டம் வாங்க மறுத்த மாணவி ஜீன் ஜோசப் குற்றம்சாட்டியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று 32 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ரவி கலந்துகொண்டார். அப்போது ஆளுநர் ரவி,  பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் உள்ளிட்டோர் மேட்டையில் நின்று    மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். அனைத்து மாணவர்களுக்கும் ஆளுநர் ரவி, பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.  அப்போது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற நாகர்கோவில் சேர்ந்த முனைவர் பட்டம் பெற்ற ஜீன்ஸ் ஜோசப் என்கிற மாணவி ஆளுநர் ஆர்.என். ரவியை புறக்கணித்தார்.  ஆளுநரிடம் பட்டத்தை பெற்றுக் கொள்ளாமல் நேரடியாக அவருக்கு அருகில் இருந்த துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டத்தை பெற்றுக் கொண்டார்.  

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இளம் பெண் ஜீன் ஜோசப், “தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிராக செயல்படுவதால் ஆளுநர் கையில் பட்டத்தை வாங்கவில்லை.  திராவிட மாடல் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவுதான். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஆளுநர் என்ன செய்தார்? முதல்வரோ அமைச்சர்களோ பட்டமளித்திருந்தால் வாங்கியிருப்பேன். எனது கணவர் நாகர்கோவில் மாநகர துணை செயலாளராக இருக்கிறார். திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவள் நான்” என்றார்.