×

சபாநாயகர் தேர்தலில் ஜே.சி.டி.பிரபாகர் போட்டி

 

தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகர் பதவிக்கு போட்டியிட ஆளும் கட்சியான தவெகவின் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ ஜே.சி.டி.பிரபாகர் வேட்புமனுவை முறைப்படி தாக்கல் செய்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகர் பதவிக்கு போட்டியிட ஆளும் கட்சியான தவெகவின் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ ஜே.சி.டி.பிரபாகர் வேட்புமனுவை முறைப்படி தாக்கல் செய்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு ஜே.சி.டி.பிரபாகர் வெற்றி பெற்றார். இதேபோல் 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் பிரபாகர். எதிர்க்கட்சி சார்பில் வேறு ஒருவரை சபாநாயகராக முன்மொழிந்தால் குரல் வாக்கெடுப்பு நடைபெறும். எதிர்க்கட்சி தரப்பில் யாரும் முன்மொழியப்படாவிடில் ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார்.