“தமிழ்நாட்டில் வறுமை குறைந்து வருகிறது”- ஜெயரஞ்சன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 2025-26 ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார் மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயரஞ்சன், “2025 - 2026 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளோம். தமிழகத்தில் 25 சதவீதம் பேர் மட்டுமே வேளாண் துறையில் உள்ளனர். வளர்ந்த நாடுகளில் ஒற்றை விழுக்காட்டில் மட்டுமே வேளாண் துறையில் இருப்பார்கள். உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது. மின்னணு சாதன பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு பிரமாண்ட வளர்ச்சியை அடைந்துள்ளது. உலகம் முழுவதும் தோல் அல்லாத காலணிக்கு ஒரு தேவை உள்ளது, தமிழ்நாட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறது. 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் விலைவாசி எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டது என்பது பற்றி ஆய்வறிக்கை.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. மற்ற மாநிலங்களில் உள்ள உணவுப்பொருள் விநியோகம் அதிகரிப்பு தாக்கம் தமிழ்நாட்டில் இருக்காது. உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் வறுமை நிலை குறைந்தும், பொருளாதாரம் உயர்ந்தும் வருவதால், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி கூடியுள்ளது. அதில் தொழில்துறை முக்கிய பங்கு வகிக்கிறது” என்றார்.