×

"அதிமுக மக்களுக்காகவே இயங்கும்’  என்ற அம்மாவின்  கருத்திற்கு செயல் வடிவம் கொடுப்போம் - ஓபிஎஸ் 

 

மக்களுக்காக தன்னையே  அர்ப்பணித்துக் கொண்ட அம்மா அவர்களின் தியாகம் என்றென்றும் போற்றப்படும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76-வது பிறந்த நாளான இன்று அவரது அர்ப்பணிப்புச் செயல்பாட்டினை நினைவுகூர்வோம். தமிழக மக்களுக்காக தன்னையே  அர்ப்பணித்துக் கொண்ட மாண்புமிகு அம்மா அவர்களின் தியாகம் என்றென்றும் போற்றப்படும்.