ஜெயலலிதா பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி மரியாதை..!!
Feb 24, 2026, 11:43 IST
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தார். அவர் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கட்சி அலுவலகத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து, நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.