×

ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்கத் போவதாக மிரட்டல்!

ஜெயலலிதா நினைவிடத்தை குண்டு வீசி தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் ரூ.80கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. பீனிக்ஸ் பறவை போல் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள நினைவிடமானது 15 மீ உயரம், 30.5 மீ நீளம், 43 மீ அகலத்தில் உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு மறைந்த ஜெயலலிதாவிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நினைவிடம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இதையடுத்து கடந்த 27
 

ஜெயலலிதா நினைவிடத்தை குண்டு வீசி தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் ரூ.80கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. பீனிக்ஸ் பறவை போல் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள நினைவிடமானது 15 மீ உயரம், 30.5 மீ நீளம், 43 மீ அகலத்தில் உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு மறைந்த ஜெயலலிதாவிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நினைவிடம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் முதல்வர் பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா போன்ற இடங்களில் பணிகள் இன்னும் நிறைவு பெறாததால் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்கத் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்து, மிரட்டல் விடுத்த கொருக்குப்பேட்டை இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு வேலை வழங்காவிட்டால் ஜெயலலிதா நினைவிடத்தை தகர்க்கப் போவதாக இளைஞர் நேரில் மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்த பிரசாத் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற சந்தேகத்தில் மெரினா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.