×

அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைத்தே தீருவோம்  - தினகரன் சூளுரை 

 

தமிழ்நாட்டில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைத்தே தீருவோம் என்று தினகரன் சூளுரைத்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழக மக்களின் வளர்ச்சியையே லட்சியமாக கொண்டு இந்தியாவுக்கே முன்மாதிரியான சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி “மக்களால் நான்; மக்களுக்காகவே நான்” என தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்த இதயதெய்வம் அம்மா அவர்களின் பிறந்தநாள் இன்று.

யார் போற்றினாலும் தூற்றினாலும் என் கடன் பணி செய்து கிடப்பதே எனக்கூறி தமிழக மக்களின் நலனுக்காக அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை திட்டம், மகளிர் காவல்நிலையம், மழைநீர் சேகரிப்பு, மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி என இதய தெய்வம் அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்கள் அனைத்தும் பூமி உள்ளவரை அவரின் புகழை பாடிக் கொண்டே இருக்கும்.