×

“சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி ‘I am Sorry’ என சொல்ல வேண்டும்”- ஜவாஹிருல்லா

 

சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி ‘I am Sorry’ என சொல்ல வேண்டும். அதுவே நல்ல பிராயச்சித்தமாக அமையும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, “பிரச்சாரத்தில் பேசியதற்காக ஸ்டாலினிடம் நேரில் சாரி கேட்ட முதல்வர் விஜய், சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உடல் மொழியால் கொச்சைப்படுத்தும் வகையில் பரப்புரை செய்த முதலமைச்சர் விஜய், சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி 'I AM SORRY' என சொல்ல வேண்டும். அதுவே நல்ல பிராயச்சித்தமாக அமையும். தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணி நீண்ட காலம் நிலைக்காது. இந்தக் கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகள் வேறுபட்ட நிலைப்பாடுகளைத் தெரிவித்துள்ளன” என்றார்.