“First option எங்க அப்பா தான்” - நெகிழ வைத்த ஜேசன் சஞ்சய்
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் “Sigma” என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் கால்பதித்துள்ளார்.
இப்படம் குறித்த நேர்காணல் ஒன்றில் பேசிய முதலமைச்சரின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சயிடம் தொகுப்பாளர்: ஹாலிவுட்ல இருந்து ஜெய்சன் ஸ்டேதம் உங்களைக் கூப்பிட்டு, ‘நல்லா இருக்குப்பா! நம்ம ஹாலிவுட்ல ஒரு படம் பண்ணலாம்’னு சொல்லி, இங்க இருந்து ஒரு நடிகரைக் கூட்டிட்டு வரச் சொன்னா... யாரைக் கூட்டிட்டு போவீங்க? எனக் கேள்வி கேட்கிறார். அதற்கு ஜேசன் சஞ்சய்: "ஃபர்ஸ்ட் மைண்டுக்கு வர்றது அப்பா தான்.” என்றார். உடனே தொகுப்பாளர்: "அப்பா...!" எனக் கேட்க அதற்கு ஜேசன் சஞ்சய்: "ஆமா! நல்ல காம்பினேஷனா இருக்கும்ல!" என்கிறார்.
Jason sanjay about CM Vijay ☺️♥️🔥 pic.twitter.com/l8bu4qNmJl
— Ash (@AshfaqVoice) July 31, 2026
சிறுவயதில். என் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் போன் செய்து ப்ராங்க் (Prank) பண்ணுவது வழக்கம். என் டீன் ஏஜ் வயதில் நான் ஒரு பைலட் அல்லது கிரிக்கெட் வீரராக வர விரும்பினேன். என் அப்பா முதல் ஐபிஎல் (IPL) சீசனுக்கான பிராண்ட் அம்பாசிடராக இருந்தார். அவர்தான் என்னை ஐபிஎல்-க்கு அழைத்துச் சென்றார். பின்னர் நான் வளர்ந்தபோது எனக்கு filmmaking மீது ஆர்வம் ஏற்பட்டது என ஜேசன் சஞ்சய் கூறினார்.