மதுரையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000-க்கு விற்பனை..!
Dec 25, 2025, 04:35 IST
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3,000-க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல் கனகாம்பரம் ஒரு கிலோ ரூ.1,500-க்கும், பிச்சி மற்றும் முல்லை ஆகிய பூக்கள் ஒரு கிலோ ரூ.1,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.