மீண்டும் இணையத்தில் வெளியான ஜனநாயகன்
Jul 23, 2026, 19:31 IST
முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியான நிலையில், மீண்டும் UNEDIT வெசன் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரும், நடிகருமான விஜய் நடித்துள்ள ’ஜனநாயகன்’ திரைப்படம் இன்று (ஜூலை 23) வெளியானது. நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலகளவில் 7,500-க்கும் அதிகான திரையரங்குகளிலும் வெளியாகினது. திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு அதிகாலை முதலே திரையரங்க வளாகம் திருவிழாப் போலக் களைகட்டியது.
இந்நிலையில் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியான நிலையில், மீண்டும் UNEDIT வெசன் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாதம் இணையத்தில் UNEDIT வெசன் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் வெளியாகியுள்ளதால் படக்குழு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.