ஜனநாயகன் தணிக்கைச்சான்று வழக்கு ஜன.15 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
Jan 13, 2026, 21:41 IST
ஜனநாயகன் தணிக்கைச்சான்று வழக்கு ஜன.15 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஜனநாயகன் தணிக்கைச்சான்று வழக்கு ஜன.15 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி திபங்கர் தத்தா நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறடு. அன்றைய தினம் 21 வது வழக்காக விசாரணைக்கு வருகிறது.
விஜய் தனது ஜனநாயகன் படன் தான் கடைசி என்றும் , அதன் பிறகு முழு நேர அரசியல் பணியில் ஈடுப்பட போவதாக அறிவித்தார். இந்த சூழலில், ஜன நாயகன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. தவெக தலைவர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாகி இருப்பது குறிப்பிடதக்கது.