நாளை ஜனவரி 1 : வங்கிகள் செயல்படுமா இல்ல விடுமுறையா ? RBI சொல்வதென்ன..!
ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தினத்தன்று வங்கிகள் திறந்திருக்குமா என்பது பல வாடிக்கையாளர்களுக்கு உள்ள முக்கிய கேள்வியாக உள்ளது. இது வாடிக்கையாளர்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்தது.
இறுதி நாளான டிசம்பர் 31ஆம் தேதியை பொருத்தளவில் அன்றைக்கு விடுமுறை இருக்குமா என்கிற குழப்பம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த நிலையில், அதுபற்றி ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்திருக்கிறது.இது ஒரு சாதாரண வேலை நாளாகவே கருதப்படுகிறது. மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் மட்டும் உள்ளூர் விடுமுறை என்பதால் அங்கு மட்டும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். சென்னை உட்பட இந்தியாவின் பிற அனைத்து நகரங்களிலும் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்.
தமிழ்நாட்டில் ஜனவரி 1 புத்தாண்டு அன்று வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும். கொல்கத்தா, ஷில்லாங், இம்பால் போன்ற நகரங்களில் வங்கிகளுக்கு அதிகாரப்பூர்வ விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஆனால், மும்பை, டெல்லி போன்ற பல நகரங்களில் இது கட்டாய விடுமுறை அல்ல. அதாவது அங்கு விருப்ப விடுமுறை அல்லது வேலை நாளாக இருக்கலாம். அல்லது குறைந்த ஊழியர்களை கொண்டு வங்கிகள் இயங்கும்.
கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்/மன்னம் ஜெயந்திக்காக ஜனவரி 2 ஆம் தேதி விடுமுறை இருக்கும். அதாவது அங்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.