பாதியில் நிறுத்தப்பட்ட ஜனநாயகன் - ரசிகர்கள் அதிர்ச்சி
குழந்தைகளுடன் படம் பார்க்க வந்த பெற்றோரால் அமைந்தகரை மாலில் திரையிடப்பட்ட `ஜனநாயகன்' தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஆம்பா மாலில் உள்ள பிவிஆர் சினிமாஸில் காலை 9:25 மணிக் காட்சி திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. படம் பார்க்க நேற்று பெற்றோர் குழந்தைகளுடன் வந்ததால் சர்ச்சையாகி சமூக வலைதளத்தில் வீடியோ வைரலானது. இன்றும் பல குடும்பத்தினர், குழந்தைகளை படம் பார்க்க அழைத்துவந்ததாக செய்தி வெளியானது. இதனையடுத்து தியேட்டருக்கு திடீரென வந்த காவல்துறையினர், படத்தை பாதியில் நிறுத்திவிட்டு, குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களை வெளியேற்றினர். அவர்களை வெளியேற்றிய பின் ஜனநாயகன் படம் மீண்டும் திரையிடப்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் திரைப்படம் நிறுத்தப்பட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
குழந்தையுடன் படம் பார்க்க வந்தவர்களுக்கு, திரையரங்க நிர்வாகம் பணத்தைத் திரும்ப அளிப்பதாக அறிவித்தது. இதனையடுத்து அவர்கள் வெளியேறினர். இந்திய மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் 'A' தரமதிப்பீடு என்பது 'பெரியவர்கள் மட்டும்' பார்க்க என்பதைக் குறிக்கிறது. தடையை மீறி தியேட்டர் நிர்வாகத்தினர் குழந்தைகளை அனுமதிப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளது.