×

#BREAKING முடிவுக்கு வரும் ஜனநாயகன் பட பிரச்னை?

 

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தை தணிக்கை சான்று வழங்குவது தொடர்பாக குழு நாளை ஆய்வு செய்யவுள்ளனர்.

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன், வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகின்றது. உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் எனப் படத்தின் சான்றிதழுக்காக அலைந்த படக்குழு, இறுதியில் வழக்கை திரும்பப்பெற்று மறுதணிக்கைக்குப் படத்தை அனுப்பிவைத்தது. மறுதணிக்கை குழுவினர் படத்தைப் பார்த்து சான்று அளிக்காமல் தாமதப்படுத்தி வருகின்றனர். 

இந்த சூழலில் ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வு குழுவினர் நாளை பார்க்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு தணிக்கை வாரியம் அழைப்பு விடுக்கவுள்ளது.தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் இதுவரை வெளியாகாமல் ஜனநாயகன் திரைப்படம் முடங்கிக் கிடக்கிறது. நாளை மறு ஆய்வு நடக்காவிட்டால் மார்ச்19ல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.