Jananayagan Issue : விஜய்க்கு ஆதரவாக இறங்கிய முக்கிய நடிகர்கள்..!
ஜனநாயகன் பட விவகாரத்திற்கு விஜய்க்கு ஆதரவாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் பேட்டியாகவும், சமூக வலைதளங்களிலும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் அரசியல் ரீதியாகவும், சிலர் விஜயின் ரசிகர்களில் ஒருவராகவும் இருந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரபலங்களின் கருத்து :
காங்கிரஸ் எம்பி., ஜோதிமணி - தணிக்கை வாரியம் என்பது ஒரு காலாவதியான அமைப்பு. ஒரு திரைப்படத்தை ஏற்பதும், மறுப்பதும் மக்கள் கையில் தான் இருக்கிறது. அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையைத் தொடர்ந்து, தற்போது தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாக மாறிவிட்டது. இது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் மீது நடத்தப்படும் தாக்குதல். இத்தகைய தணிக்கை முறை கலைக்கப்பட வேண்டிய ஒன்று.
டைரக்டர் வெங்கட் பிரபு - "எது எப்படியானாலும் சரி... இந்திய சினிமாவில் இது மிகப்பெரிய FAREWELL (பிரியாவிடை) படமாக இருக்கும்".
நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) - "அண்ணா... ஒரு தம்பியாக கோடிக்கணக்கான தம்பிகளில் ஒருவனாக நான் உங்கள் பக்கம் நிற்கிறேன். உங்களுக்கு என்று ஒரு தேதியோ நேரமோ தேவையில்லை, நீங்கள் வரும் போதுதான் திருவிழா தொடங்கும். ஜனநாயகம் எப்போது வந்தாலும், அப்போதுதான் எங்களுக்குப் பொங்கல் ஆரம்பிக்கும்"
டைரக்டர் அமீர் - " ஒரு சினிமாவ வர விடாம தடுத்துட்டா அவங்கள தன் வழிக்கு கொண்டு வரலாம் என்கிற எண்ணம் எவ்வளவு கேவலமானது".