×

கோவை லோக்கல் சேனலில் ஒளிபரப்பான ‘ஜனநாயகன்’- கேபிள் ஆப்ரேட்டர் கைது

 

கோவை மாவட்டத்தில் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் ஜனநாயகன் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

திரையரங்குகளில் வெளியாகாத ஜனநாயகன் திரைப்படம் ஆன்லைனில் லீக்கானது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கருமத்தம்பட்டியில் உள்ள ராசி என்ற உள்ளூர் தொலைக்காட்சியில் ஜனநாயகன் படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஜனநாயகன் படத்தை டவுன்லோடு செய்து பரப்பியவர்கள் கைது செய்யப்படும் நிலையில், தற்போது கோவை மாவட்டத்தில் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் ஜனநாயகன் திரைப்படம் ஹெச்.டி. பிரிண்டில் ஒளிபரப்பு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கருமத்தம்பட்டியில் உள்ளூர் கேபிள் டிவியில் ஜனநாயகன் படத்தை வெளியிட்ட விவகாரத்தில் உள்ளூர் கேபிள் டிவி உரிமையாளர் பழனிசாமி கைது  செய்யப்பட்டுள்ளார். கம்யூட்டர், நான்கு ஹார்ட் டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.