ஜனநாயகன் தணிக்கை சான்று - நீதிமன்றத்தை நாட ஆலோசனை?
Jan 5, 2026, 15:21 IST
ஜனநாயகன் படத்திற்கான தணிக்கை சான்று கிடைக்காத நிலையில் நீதிமன்றத்தை நாட படக்குழு திட்டமிட்டுவருகிறது.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை குழு இன்னும் சான்றிதழ் வழங்காத நிலையில், படம் வெளியாக மூன்று நாட்கள்தான் இருப்பதால் நீதிமன்றத்தை நாடலாமா என படக்குழு ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. ஜனநாயகன் திரைப்படத்தை தணிக்கை குழுவினர் டிசம்பர் 19ஆம் தேதி பார்த்தனர். படம் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களை செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. படம் வெளியாக இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் நீதிமன்றத்தை நாட படக்குழு ஆலோசனை நடத்திவருகிறது.