×

"ஒரு தறுதலையின் செயல்"- ஜேம்ஸ் வசந்தன்

 

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைத்ததில் அரசியல் இல்லை என திருவான்மியூர் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "கார் கண்ணாடி உடைப்பு சம்பவத்தில், காவல்துறை விசாரித்ததில் இது தனிப்பட்ட ஒரு தறுதலையின் செயல் என்றும், எந்த அரசியல் தொடர்பும் இல்லையென தெரியவந்திருக்கிறது, கல்லெறிந்த நபர் எச்சரித்து அனுப்பிவிடப்பட்டார். உடன்நின்ற அனைவருக்கும் நன்றி. இதைச் சொல்லவேண்டிய கடமை எனக்கிருப்பதால் இதைப் பகிர்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடியை அடையாளம் தெரியாத நபர்கள் உடைக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து அவர் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில், தன்னுடைய கார் கண்ணாடி உடைப்பட்டு சேதப்படுத்தப்பட்ட வீடியோவை பகிர்ந்து இருந்தார்.