ஜெயிலர் 2 ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! 30 நிமிடம் கூடுதல் காட்சிகளுடன்..!
‘ஜெயிலர் 2’ படம் தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத அளவிற்கு வசூலை குவித்து வருகிறது. நெல்சன் ஸ்டைலில் ரஜினிகாந்தின் ஆக்ஷன் காட்சிகள், அனிருத்தின் அசத்தலான பின்னணி இசை ரசிகர்களை கவர்ந்தது. காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த ரஜினி படமாக ஜெயிலர் 2 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வசூலைப் பெற்ற இப்படம், உலகளவில் ரூ.825 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் ஒன்றாக ‘ஜெயிலர் 2’ இடம்பிடித்துள்ளது. அடுத்ததாக ரூ.1,000 கோடி வசூலை எட்டுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் சுமார் 30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் ‘அன்கட் வெர்ஷன்’ ஆக வெளியாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, திரையரங்குகளில் வெளியான பதிப்பில் இடம்பெறாத சில காட்சிகள் டிஜிட்டல் வெளியீட்டில் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, சந்தானம், மோகன்லால், விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோர் தொடர்பான நீக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற நவம்பர் 12ந் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தியேட்டரில் படத்தை காண தவறியவர்கள் ஓடிடியில் வீட்டில் இருந்தபடியே கண்டு ரசிக்கலாம்.