ஜெயிலர் 2 மாஸ் அப்டேட் : 39 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கூட்டணி…!
ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் ஜெய்லர் படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் நடிகர்கள் 2 அம் பாகத்திலும் தொடரும் நிலையில் சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட புது நடிகர்களும் நடிக்கின்றனர்.
ஜெய்லர் 1 ஆம் பாகத்தில் கன்னட நடிகர் சிவார்ஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் தோன்றினர்.
அதே போல ஜெய்லர் 2 ஆம் பாகத்திலும் பலர் கேமியோ ரோலில் நடிக்கின்றனர். அதன் படி பாலிவுட் நடிகர் ஷாருக் கானை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க படக்குழு முயற்சித்தது. ஆனால் அது கைக்கூட வில்லை.
இந்த நிலையில் ஜெய்லர் 2 ஆம் பாகத்தில் ஷாருக்கானுக்கு பதிலாக பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கிட்டத்தட்ட 39 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்துடன் சேர்ந்து ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளார். 1986-ல் வெளியான ‘ பகவான் தாதா’ என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் – ஹிருத்திக் ரோஷன் இணைந்து நடித்திருந்தனர். அதில் குழந்தை ஹிருத்திக் ரோஷன், ரஜினிகாந்தின் வளர்ப்பு மகனாக நடித்திருந்தார்.