×

ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் உற்பத்தி ஆலை- பிப்.9ம் தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

 

ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி தொழிற்சாலையை வரும் 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் குழுமம், 5 ஆண்டுகளில், ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இந்த தொழிற்சாலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்ய டாடா நிறுவனம் முடிவு செய்தது. இதன்படி, இந்த தொழிற்சாலைக்கு கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தொழிற்சாலையை வரும் 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் அளவு திறன் கொண்ட இந்த தொழிற்சாலையில், முதல் கட்டமாக ரேஞ்ச் ரோவர் எவோக் கார் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அடிக்கல் நாட்டப்பட்டு 16 மாதங்களில் இந்த தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.