தமிழக முதல்வர் விஜய்யின் தனி செயலாளராக ‘The Route’ ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்..!
தமிழக முதல்வர் விஜய் திரையுலகில் இருந்தபோது அவருடைய மேலாளராக ஜெகதீஷ் பழனிசாமி பணியாற்றினா.இந்நிலையில் இவரை தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் தனி செயலாளராக (அரசியல்) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் பொதுத்துறை முதன்மை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் பிறப்பித்துள்ளார்.
அந்த வகையில் விஜய்யின் மேனேஜராக ஜெகதீஷ் பழனிச்சாமி முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சோஷியல் மீடியாவில் பதிவு போட்டு இருக்கின்றார்.
ஜெகதீஷ் பழனிசாமி தமது சமூக வலைதள பக்கங்களில், “18 ஆண்டுகளுக்கு முன்பு, உங்களுடன் போட்டோ எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்த தீவிர ரசிகனாக நான் இருந்தேன். இன்று, மாநிலத்தின் “மாண்புமிகு முதலமைச்சரின் தனிச் செயலாளராக” உங்கள் அருகில் நிற்கும் இந்த தருணம், வாழ்க்கை முழுமையடைந்ததை உணர்த்துகிறது. இன்று நான் யாராக இருக்கிறேனோ, அதற்கு முழு முதற்காரணம் நீங்கள்தான்.
எவ்வளவு சோகமாக இருந்தாலும், உங்கள் முகத்தில் இருக்கும் ஒரு சிறு புன்னகை போதும், என் மனநிலையை முழுமையாக மாற்றி நேர்மறையான ஆற்றலைத் தந்துவிடும். என் கடினமான காலங்களில் நான் ஓடுவதற்கு நீங்கள் கொடுத்த அந்த உத்வேகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
என் ”கடவுளுக்கு” இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தளபதி விஜய் அண்ணா. நீங்கள் தமிழக மக்களுடன் இணைந்து இன்னும் பல உயரங்களைத் தொடவும், உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்!” என பதிவிட்டுள்ளார்.
18 years ago, I stood in line as a die-hard fan, hoping for a photo with you. Now, Standing beside you as “The Private Secretary to the Hon’ble Chief Minister” of the State. Life has come full circle ❤️ I owe you everything for who I am today.
— Jagadish (@Jagadishbliss) June 22, 2026
Doesn’t matter how low I feel,… pic.twitter.com/jWRHMRvlAU