☰
×

தூய்மை பணியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! தினசரி ஊதியம் அதிரடி உயர்வு....!

 

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மாநிலம் முழுவதும் பணிபுரியும் பகுதிநேர மற்றும் தினக்கூலித் தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ஊதிய உயர்வு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தூய்மைப் பணியாளர்களுக்கு இதுவரை தினசரி ஊதியமாக வழங்கப்பட்டு வந்த ரூ.290, இனி நாள் ஒன்றுக்கு ரூ.424 ஆக மாற்றி வழங்கப்படும். இந்த ஊதிய உயர்வு அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் மூலம் புதுச்சேரியில் உள்ள ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நேரடியாகப் பலன் பெறுவார்கள்.

மாநிலத்தின் சுகாதாரத்தைப் பேணிப் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்காற்றும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு நிலவி வரும் இக்காலக்கட்டத்தில், தினசரி ஊதியம்ரூ.290-லிருந்து ரூ.424 ஆக உயர்த்தப்பட்டிருப்பது தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.