☰
×

நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்த தங்கம் விலை..!!

 

தங்கத்தின் விலை மேலும் குறையும் என்று பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டு வரும் நிலையில், தங்கத்தை இப்போது வாங்கலாமா அல்லது காத்திருக்கலாமா என்ற குழப்பமும் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

நேற்று (நவம்பர் 24) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.115 உயர்ந்து ரூ.11,715-க்கும், ஒரு சவரன் ரூ.920 உயர்ந்து ரூ.93,720-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.175-க்கு விற்பனையானது

இன்று (நவம்பர் 25) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.295 குறைந்து ரூ.11,420-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,360 குறைந்து, ரூ.91,360-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.165-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.1,65,000-க்கு விற்பனையாகிறது.