☰
×

நகை வாங்குவோருக்கு ஜாக்பாட்..!! இன்றும் தங்கம் விலை தாறுமாறாக குறைந்தது..!! 

 

தங்கம் விலை தாறுமாறாக குறைந்து வருகிறது. இதனால் நமது நாட்டில் நகைப்பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனென்றால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்னையில் ரூ. 1.34 லட்சத்திற்கு விற்கப்பட்ட தங்கம் விலை தற்போது ரூ. 92 ஆயிரத்துக்கு சென்றிருக்கிறது. அதாவது சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ. 40,000 வரை குறைந்திருக்கிறது.

 நேற்று (நவம்பர் 20) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.470 குறைந்து ரூ.11,510-க்கும், ஒரு சவரன் ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.175-க்கு விற்பனையானது.

இன்று (நவம்பர் 21) தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 சரிந்து ரூ.91,720க்கு விற்பனையாகிறது.

 

மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.45 குறைந்து ரூ.11,465க்கு விற்கப்படுகிறது.

கடந்த 16 நாட்களில் தங்கம் விலை ரூ.15,360 சரிந்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.175க்கும் ஒரு கிலோ ரூ.1,75,000க்கும் விற்கப்படுகிறது.