“ஜெ. உயிலை விரைவில் வெளியிடுவேன்... எனக்கு முதல்வர் பதவி வேண்டாம், எம்.எல்.ஏ சீட்டு போதும்”- ஜெயலட்சுமி
செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது தொடர்பாக அமித்ஷாவை சந்தித்து பேசினேன், நான் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசும் பொழுது ஒரு வாரம் பொறுத்திருங்கள் என கூறினார் என ஜெயலலிதாவின் மகள் என்று தன்னைக் கூறி வரும் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலட்சுமி, “அதிமுக அலுவலகம் சென்ற என்னை நேற்று அசிங்கப்படுத்தி அனுப்பினார்கள், நான் எனக்கு முதலமைச்சர் பதவி தர வேண்டும் என நான் கேட்கவில்லை. ஒரு எம்எல்ஏ கலந்தாய்விற்கான பாம் கொடுத்தேன், பணம் கட்டி தான் பார்ம் வாங்கியுள்ளேன். அன்று என்னை தடுத்திருக்கலாம். நான் தனியாகத்தான் சென்று மரியாதை கொடுத்து நடந்து கொண்டேன். நேர்காணலுக்கு வருவதற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, நான் போனவுடன் கதவு மூடப்பட்டது. காரின் கதவை அடித்தார்கள் இங்கிருந்து போ என துரத்தினார்கள். கோகுல இந்திரா நான் வந்திருப்பது தெரிந்து தான் இருக்கையில் இருந்து எழுந்து சென்று விட்டார்.
எனக்கு சாதாரண எம்எல்ஏ சீட்டு போதும் மக்களுக்கு சேவை செய்வதற்கு முதலமைச்சர் பதவி தேவையில்லை, என்னை அசிங்கப்படுத்தியதற்கான காரணத்தை எடப்பாடி பழனிச்சாமி கூற வேண்டும். நான் செல்லும் இடங்களில் எல்லாம் தனி கட்சி ஆரம்பிக்க வேண்டாம், அம்மாவின் கட்சிக்குள்ளையே வந்து விடுங்கள் என கூறியதால் தான் நானும் தனி கட்சி ஆரம்பித்து அதிமுகவின் ஓட்டுகளை சிதறடிக்க வேண்டாம் என்று தான் புதிய கட்சி துவங்கவில்லை. யார் சொல்லியும் நான் மனு கொடுத்த செல்லவில்லை, நானாகத்தான் சென்றேன். தேனி போடிநாயக்கனூர் பகுதியைச் சார்ந்த ஞானவேல் ராஜா என்பவரிடம் உயில் உள்ளது, விரைவில் அதை வெளியிடுவேன். வாரிசாக இருந்தால் அதிமுகவில் இருக்க வேண்டும் என விதி உள்ளதா என கேட்கிறார்கள். எனக்கு எந்த பதவியும் வேண்டாம், எனக்கு எங்க அம்மாவின் ஆட்சி மலர வேண்டும், ஒரு சிறிய எம்எல்ஏ பதவி கொடுத்தால் போதும். கொடநாடு சம்பவம் அனைவருக்கும் தெரியும். அம்மாவின் நகைகள், ஆவணங்கள் எல்லாம் எடுத்துச் செல்லப்பட்டு விட்டது, திருடப்பட்ட அனைத்தும் சாமுண்டீஸ்வரி என்பவரிடம் இருக்கிறது. அம்மா கட்சி வெற்றி பெறக் கூடாது என்பதுதான் எடப்பாடியின் குறிக்கோள். சசிகலா கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்றுதாக கூறி விட்டார்கள். ஆனால் அவரிடமிருந்த பதவியையும் எடுத்துக் கொண்டார்கள். செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது தொடர்பாக அமித்ஷாவை சந்தித்து பேசினேன், நான் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசும் பொழுது ஒரு வாரம் பொறுத்திருங்கள் என கூறினார்” என்றார்.