“விஜய் எல்லா கட்சியினர் ஓட்டையும் பிரிப்பார்”- ஜெ.தீபா
Feb 24, 2026, 17:29 IST
தவெக தலைவர் விஜய் அதிமுக ஓட்டை பிரிப்பதோடு மட்டுமல்லாமல் எல்லா கட்சியினர் ஓட்டையும் பிரிப்பார் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, “எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பலமுறை முயன்றுள்ளேன். சந்திக்க அனுமதியே கிடைக்கவில்லை. ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அழைக்க அவரை சந்திக்க முயன்றோம். ஆனால் அவர் மதிக்க கூட இல்லை. என்னை சந்திப்பதை தவிர்ப்பது போல தெரிகிறது. என்னை ஒதுக்க அவர் யார்? தவெக தலைவர் விஜய் அதிமுக ஓட்டை பிரிப்பதோடு மட்டுமல்லாமல் எல்லா கட்சியினர் ஓட்டையும் பிரிப்பார். இன்றைய அவரின் மேடை பேச்சுகள் எல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா பேசியதுதான்” என்றார்.