"கோடி கோடியா பணம் எடுத்து வந்தாங்க.. உங்களுக்கு எந்த அமைச்சர் பதவி வேண்டும்னு கேட்டாங்க"- IUML எம்எல்ஏ பரபரப்பு பேச்சு
திமுகவும் அதிமுகவும் இணைந்து எடப்பாடியை ஆட்சியில் அமர வைப்பதாக மு.க ஸ்டாலின் கூறியதால் கூட்டணியில் இருந்து வெளியே வந்ததாக IUML எம்எல்ஏ சையத் பரூக் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சித் தலைவர் சையத் பரூக், “தேர்தல் முடிந்த பிறகு என்னையும், ஷாஜகானையும் தேடி 2 பெட்டிகளில் கோடி கோடியா பணம் எடுத்து வந்தாங்க.. உங்களுக்கு எந்த அமைச்சர் பதவி வேண்டும்னு எங்களிடம் கேட்டாங்க.. கையெழுத்து போட சொன்னாங்க. எந்த அமைச்சர் பதவி வேண்டும்? உள்ளாட்சி வேண்டுமா? போக்குவரத்துத்துறை வேண்டுமா? என்று கேட்டார்கள். நாங்க கோடிக்கு சாய்ந்தவர்கள் அல்ல கொள்கை சார்ந்தவர்கள்னு சொல்லிவிட்டோம். திமுகவும் அதிமுகவும் இணைந்து அதிமுகவை ஆட்சியில் அமர வைப்பதாக ஸ்டாலின் கூறியதால் கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம்” என பேசிய வீடியோ வைரலாகிவருகிறது.