×

ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்க திமுக கோரிக்கை விடுத்துள்ளது- காதர் மொய்தீன்

 

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில்   திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் எண்ணிக்கை குறைவாகவே தான் கொடுக்கப் போகிறார்கள் என அண்ணா அறிவாலய  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்  திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், “சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. தி.மு.க.விடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம். ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்க திமுக கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்து கூட்டணிக் கட்சிகளுமே தொகுதிகளை விட்டுக் கொடுக்க உள்ளன என திமுக கூறியது. குறைந்தபட்சம் 4 தொகுதிகள் ஒதுக்க வலியுறுத்தியுள்ளோம். திமுக நல்லாட்சி மீண்டும் வர வேண்டும் என்ற உணர்வோடுதான் கூட்டணிக் கட்சிகள் பாடுபடுகிறார்கள். இன்னும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகவில்லை” என்றார்.