×

சோகம்..! கோவை அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு..!!

 
கோவை தொண்டாமுத்தூர் அருகே உணவு, குடிநீர் தேடி வந்த 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
வயலில் அமைக்கப்பட்டு இருந்த மின்கம்பியை சாய்த்தபோது அந்த மின்சார கம்பம் யானையின் மீது விழுந்துள்ளது. அப்போது மின்சாரம் தாக்கி அந்த யானை உயிரிழந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.