×

சோகம்..! தேமுதிக மாநாட்டில் மயங்கி விழுந்த நிர்வாகி உயிரிழப்பு..! 

 

கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் இன்று தேமுதிக உரிமை மீட்பு மாநாடு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக சார்பில் நடைபெற்ற இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்காக சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

மாலை 5 மணி அளவில் தேமுதிக கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்கியது. விஜயகாந்த் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால், மாநாட்டு திடலுக்கு வந்த பிரேமலதா விஜயகாந்துக்கு தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, செல்வராஜுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர், தாவாடநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(35). தேமுதிக கிளை செயலாளரான இவர், கடலூரில் நேற்று (ஜன.09) நடந்த மாநாட்டில் கலந்து கொண்டார். மேடையில் தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது செல்வராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நிர்வாகிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், செல்வராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.