×

இது மீன்களின் ராஜா மட்டுமல்ல... விலையிலும் ராஜா... ஒரு மீன் 15,000 ரூபாய்க்கு ஏலம்..!!

 

மீன்களின் ராஜா என அழைக்கப்படும், இந்த அரிய வகை புலாசா மீன், பருவமழை காலங்களில் இன பெருக்கம் செய்ய கடலில் இருந்து ஆற்றிற்கு இடம் பெயர்வது வழக்கம். அதிக சுவை மற்றும் புரதசத்து மிக்க இந்த மீனை ஏலம் எடுப்பதில் போட்டி ஏற்பட்டது.

இறுதியில் உள்ளூர் மீனவப் பெண்மணியான பொன்னமாண்ட ரத்னம் மற்றும் அவரது கணவர் பத்ரம் ஆகியோர் ரூ.15 ஆயிரம் கொடுத்து ஏலத்தில் எடுத்தனர்.

கடலில் வாழும் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக நன்னீரை நோக்கி நீந்தி வரும் காலகட்டத்தில் அதன் சுவை மேலும் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான குறுகிய காலத்தில் மட்டுமே இந்த மீன் கிடைப்பதும், கோதாவரி ஆற்றில் செம்மண் கலந்த வெள்ளநீர் வரும் நேரத்தில் மட்டுமே அதிக அளவில் சிக்கும் என்பதும் இதன் விலையை உயர்த்தும் முக்கிய காரணங்களாகும்.

இந்த ஆண்டு கோதாவரி ஆற்றில் போதிய வெள்ளப்பெருக்கு இல்லாததால் புலாசா மீன் வரத்து மிகவும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் வரும் நாட்களில் இதன் விலை மேலும் உயரக்கூடும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.