இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல...3 நாட்களில் தங்கம் விலை ரூ.4,040 உயர்வு..!
தொடர்ந்து 6 மாதங்களாக சரிவை நோக்கி சென்றுகொண்டிருந்த தங்கம் விலை கடந்த சில வாரங்களாக தாறுமாறாக ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. குறிப்பாக கடந்த 15 நாட்களில் மட்டும் சவரனுக்கு ஏறக்குறைய 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்து நகை வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளித்து வருகிறது.
தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்க டாலர் மதிப்பு வலுவிழப்பு, அமெரிக்க பொருளாதார மந்த நிலை, வேலைவாய்ப்பின்மையால் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதில் தாமதம் என பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்த திடீர் விலை உயர்வு முதலீட்டாளர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், இதே நிலை தொடருமா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் ஆபரணதங்கத்தின் விலை இன்று (ஆக.21) ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிரடியாக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,16,800க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.880 உயர்ந்து ரூ.1,17,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.110 உயர்ந்து ரூ.17,710க்கு விற்கப்படுகிறது. அதே போல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.265க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5000 உயர்ந்து ரூ.2,65,000க்கு விற்கப்படுகிறது
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஆகஸ்ட் 20: 1 கிராம் - ரூ.14,600 1 சவரன் ரூ.1,16,800
ஆகஸ்ட் 19: 1 கிராம் - ரூ.14,400 1 சவரன் ரூ.1,15,200
ஆகஸ்ட் 18: 1 கிராம் - ரூ.14,290 1 சவரன் ரூ.1,14,320
ஆகஸ்ட் 17: 1 கிராம் - ரூ.14,270 1 சவரன் ரூ.1,14,160
ஆகஸ்ட் 16: 1 கிராம் - ரூ.14,220 1 சவரன் ரூ.1,13,760