×

களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் தாக்கு..!

 

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  இன்று (டிச., 20) செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது வாக்குரிமையையே காப்பாற்ற போராட வேண்டிய நிலை உள்ளது. உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர். மிக குறுகிய காலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடித்துள்ளனர்.

களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது.களத்திற்கு வராதவர் களத்தை பற்றி பேசுவதா? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் நின்றவர் யார்? என்று கேள்வி எழுப்பினார்.