10 வருஷம் ஆகிடுச்சு.. இதுவரை சுமார் 40 கோடி பேர் பயணம் - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பெருமிதம்..
சென்னயில் மெட்ரோ ரயில் சேவை தொடஙகப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு பெறுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பெருமிதம் தெரிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பற்காக கடந்த 2015 ம் ஆண்டு ஜூன் 29 ம் தேதி மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர் இடையே தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம் - விம்கோநகர் , சென்ட்ரல் - பரங்கிமலை வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டது.
முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் 118.9 கி.மீ தொலைவுக்கு 63,246 கோடி மதிப்பீட்டில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. அதன்படி 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயிலுக்காப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் முழுமை பெற்றால் சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு பெரும் தீர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளுக்கு நாள் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளில் ந்ண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுகுறித்து பெருமிதம் தெரிவித்த மெட்ரோ ரயில் நிர்வாகம், நிலையில் கடந்த ஏப்ரல் வரை 39 கோடி முறை பயணிகள் பயணம் செய்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.