×

பெரும் சோகம்..! சென்னையில் இடி தாக்கி தந்தை, மகன் பலி..!

 

சென்னையை அடுத்த படப்பையில் கனமழை பெய்து வந்த நிலையில், சங்கர் தனது மகனை அரசுப் பள்ளியிலிருந்து ஏரிக்கரை வழியாக வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இருவரின் சடலங்களை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

படப்பை அருகே நாட்டரசன்பட்டு ஊராட்சி, வடமேல்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கர், 46; கூலித்தொழிலாளி. இவரது மகன் சந்திரன், 10. மறைமலைநகர் அருகே சட்டமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை படப்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால், பள்ளிக்கு நடந்து சென்ற சங்கர், தன் மகன் சந்திரனை அழைத்து கொண்டு, வடமேல்பாக்கம் ஏரிக்கரை வழியாக வீட்டை நோக்கி சென்றார். அப்போது, மின்னல் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


அந்த வழியே சென்றவர்கள் தந்தை, மகன் இறந்து கிடப்பதை பார்த்து, படப்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.