“அனுபவத்தில் பலமாக இருக்கும் எங்களோடு விஜய் வந்தால் நல்லது”- தமிழிசை
அனுபவத்தில் பலமாக இருப்பவர்களோடு அனுமானத்தில் இருப்பவர்கள் வந்தால் நல்லது வரவில்லை என்றால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என விஜய்யுடனான கூட்டணி குறித்து தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் பேட்டியளித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் மத்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விமான நிலைய விரிவாக்கம் உள்ள பலன்களை அனுபவித்து விட்டு தமிழகத்திற்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை என்று தமிழக முதல்வர் கூறி வருகிறார். அதனால் தான் 2026 இல் மிகப்பெரிய மாற்றம் வரும். புதிய கட்சிகள் எதிர்பார்க்கக் கூடியதுதானே... எதிர்த்து பல மாநிலங்களில் போட்டி போட்டு 21 மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி செய்து கொண்டிருக்கிற கூட்டணி பாஜக. எதிர்பார்க்கிற அளவிற்கு ஓட்டு சதவிகிதத்தை வைத்துக் கொண்டு அனுமானங்களின் அடிப்படையில் நீங்கள் விஜய் பலமாக இருக்கிறார் என சொல்கிறீர்கள். நாங்கள் அனுபவங்களின் அடிப்படையில், ஆட்சியின் அடிப்படையில் பலமாக இருக்கிறோம், சதவீதத்தின் அடிப்படையில் பலமாக இருக்கிறோம்.
தனியா 18 சதவிகிதம், அதிமுக ஏற்கனவே 35 சதவீதம், திமுக 1, 2% தான் அதிகமாக இருக்கிறது. அனுமானத்தில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் அனுபவத்தில் வளமாக இருக்கிறோம் என சொல்லுகிறோம், அனுபவத்தில் பலமாக இருப்பவர்களோடு அனுமானத்தில் இருப்பவர்கள் வந்தால் நல்லது வரவில்லை என்றால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சேகர் பாபுக்கு கோவில்கள் எல்லாம் சொந்தம் இல்லை.. கோவில் வாசலில் நிற்கும் உரிமையை மக்கள் தான் கொடுத்துள்ளார்கள்” என்றார்.