இனி 10 நிமிஷம் முன்னாடியே வந்துடும்! நவம்பர் 23 முதல் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தில் மாற்றம்!
“ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலுக்கு தினமும் இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16090) நவம்பர் 23-ந்தேதி முதல் அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களை கடந்து செல்லும் நேரம் மாற்றப்படுகிறது. இந்த ரெயில் அரக்கோணத்தை காலை 7.48 மணிக்கு வந்தடைவதற்கு பதிலாக 5 நிமிடம் முன்னதாக 7.43 மணிக்கே வந்தடையும். 2 நிமிடங்கள் அங்கு நிற்கும் ரெயில் காலை 7.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இதேபோல், திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கும் 10 நிமிடம் முன்னதாக காலை 8.08 மணிக்கும், பெரம்பூர் ரெயில் நிலையத்திற்கும் 10 நிமிடம் முன்னதாக காலை 8.38 மணிக்கும் வந்தடையும். இந்த இரு ரெயில் நிலையங்களிலும் 2 நிமிடங்கள் நின்று செல்லும். மற்ற ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் வந்து செல்லும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.