"தொகுதிகள்ல நாகதோஷம் இருக்கு போல... பரிகாரம் பண்ணுங்க!" - OPS கலகல பேச்சு!
"தொகுதிகள்ல நாகதோஷம் இருக்கு போல... பரிகாரம் பண்ணுங்க!" - பேரவையில் முன்னாள் முதல்வர் OPS கலகல பேச்சு!
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கேள்வி நேரம் ஆரம்பித்து நீண்ட நேரமாக பாம்புக்கடி குறித்து அமைச்சர் விளக்கம் அளித்து வருகிறார். பல்வேறு தொகுதிகளில் பாம்புக்கடி அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. அந்த தொகுதிகளில் தோஷம் இருப்பதாக அறிகிறேன். நாகதோஷம் கழிப்பதற்கு ஏதாவது பிரார்த்தனை இருந்தால், அதை நடத்த வேண்டும் என்றார்.
நாகதோஷம் கழிக்க ஏதாவது பிராத்தனை செய்ய மக்கள்நல்வாழ்வுத்துறை முன்வருமா என கேட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், நமது முதலமைச்சர் தலைமையிலான அரசு அறிவியல்பூர்வமாகவே செயல்படுகிறோம். தோஷம், பில்லி, சூனியத்தில் நமக்கு நம்பிக்கை கிடையாது என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
OPS: பாம்பு கடிக்கு நாக தோஷத்திற்கு பரிகாரம் பண்ணுங்க😭@AadhavArjuna : பெரியாரைப் பேசிய திமுக இயக்கம் இன்னைக்கு தோஷத்தை பேசிகிட்டு இருக்கு 🤣🤣🔥#TVK #CMJosephVijay pic.twitter.com/tEZywLRRS7
— CHITRAKALA TVK (@priyamudan_vj) September 2, 2026