×

ஆகஸ்ட் 1 முதல் தமிழகத்தில் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,972பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 96,438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதூம் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கானது வரும் 31
 

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,972பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 96,438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதூம் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் ஊரடங்கானது வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில் ஆகஸ்ட் 1 முதல் தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டதுபோல் பிரித்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் இதுகுறித்த தகவலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.