×

சுங்கக் கட்டணம் 10% உயர்வு- தமிழக அரசு

நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 565 சுங்கச்சாவடிகள் உள்ளது, இதில் தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை 5% முதல் 10% வரை உயர்த்தப்படுவது வழக்கம், அதன்படி 26 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் முதல் மற்ற 21 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 5% முதல் 10% வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த ஒன்றாம் தேதி சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு
 

நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 565 சுங்கச்சாவடிகள் உள்ளது, இதில் தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை 5% முதல் 10% வரை உயர்த்தப்படுவது வழக்கம், அதன்படி 26 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் முதல் மற்ற 21 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 5% முதல் 10% வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த ஒன்றாம் தேதி சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததால் சரக்கு வாகனங்களில் வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்தது.

முன்னதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தி 25 நாட்களே ஆன நிலையில் ஐடி எக்ஸ்பிரஸ் சாலையில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணத்தின்படி ஒருமுறை பயணிக்க ஆட்டோக்களுக்கு 10 ரூபாயும், கார்களுக்கு 30 ரூபாயும், இலகுரக வாகனங்களுக்கு 49 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளுக்கு 78 ரூபாயும், சரக்கு வாகனங்களுக்கு 117 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.