நள்ளிரவு அமுலுக்கு வந்தது..! இனி ரூ.100 டோல் கட்டணத்திற்கு ரூ.200 கட்ட வேண்டும்!
தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே டோல்கேட்டுகள் அமைக்கப்பட்டு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டோல்கேட்டுகளில் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகள் பாஸ்டேக்கை (FASTag) பயன்படுத்தி வருகின்றனர்.டோல்கேட்டில் இருக்கும் கேமரா, இந்த பாஸ்டேக்கை ‛ஸ்கேன்' செய்து சரியான கட்டணத்தை எடுத்து கொள்ளும். இதனால் வாகனங்கள் சுங்கக்கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை. இதனால் டோல்கேட்டில் வாகன நெரிசல் குறைந்தது.
பாஸ்டேக் பயன்பாட்டை முழுவதுமாக கொண்டு வரும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தான் இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.உதாரணமாக பாஸ்டேக்கில் டோல் கட்டணம் ரூ.100 வசூலிக்கப்பட்டால் கையில் பணம் கொடுக்கும்போது இருமடங்காக ரூ.200 செலுத்த வேண்டும்.
ஆனால், யுபிஐ மூலம் கட்டினால் வழக்கமான கட்டணத்தின் 1.25 மடங்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது FASTag இல்லாமல் ரொக்கமாக (Cash) சுங்கக் கட்டணம் செலுத்தும் வாகனங்கள், வழக்கமான கட்டணத்தைவிட இரண்டு மடங்கு (2X) கட்டணத்தைச் செலுத்த வேண்டும். உதாரணமாக, FASTag மூலம் வழக்கமான சுங்கக் கட்டணம் 100 ரூபாய் என்றால், ரொக்கப் பணம் 200 ஆக இருக்கும். மாறாக, FASTag இல்லாமல் UPI போன்ற பிற டிஜிட்டல் வழிகளில் கட்டணம் செலுத்தத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு ஓரளவு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கமான கட்டணத்தைவிட 1.25 மடங்கு (1.25X) கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டும்.
உதாரணமாக, ஒருடோல்கேட்டில் சுங்கக்கட்டணம் ரூ.100 வருகிறது என்று வைத்து கொள்வோம். இதனை பாஸ்டேக்கில் செலுத்தினால் ரூ.100 மட்டுமே போதும். ஆனால் கையில் பணமாக கொடுத்தால் 2 மடங்கு கட்டணமாக ரூ.200 கொடுக்க வேண்டும். இப்போது இந்த கட்டணத்தில் தான் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது கையில் பணம் கொடுப்பதற்கு பதில் யுபிஐ செயலி மூலமாக பணம் செலுத்தினால் 2 மடங்கிற்கு பதில் 1.25 மடங்காக ரூ.125 செலுத்தினால் போதும். இந்த புதிய கட்டண சலுகை நவம்பர் 15ம் தேதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது..