×

அதிபர் டிரம்ப் கோரிக்கையை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர்..!

 

டிரம்பின் 15 அம்ச அமைதி திட்டத்தைத் தனது நாடு நிராகரித்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

\கடந்த அக்டோபரில் ஹமாஸுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதிலிருந்து, இஸ்ரேல் காசா பகுதி முழுவதும் தினசரி கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. அப்பகுதியில் அமைதியைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட 15 அம்ச புதிய திட்டத்தை தனது அமைதி வாரியம் வெளியிட்டு, பேச்சுவார்த்தைகளில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார். தற்போது காசாவுக்கான அமெரிக்க அதிபர் டிரம்பின் 15 அம்ச அமைதி திட்டத்தைத் தனது நாடு நிராகரித்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களைக் கைவிடும் வரை, காசாவிலிருந்து தனது படைகளை இஸ்ரேல் திரும்பப் பெறாது. மேலும், நமது படைகளுக்கும் குடிமக்களுக்கும் எதிரான அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து முறியடிக்கும். நான் பிரதமராக இருக்கும் வரை, காசாவிலோ அல்லது மேற்குக் கரையிலோ எந்தவொரு பாலஸ்தீன அரசும் நிறுவப்படாது. இஸ்ரேல் தற்போது அமெரிக்கர்களுடன் இது குறித்துப் பேசி வருகிறது.அவர்களிடம் சில யோசனைகள் உள்ளன; அவற்றில் சில எங்களுக்கு ஏற்புடையவை, சில ஏற்புடையவை அல்ல. அந்த விஷயங்களை எப்படி எதிர்த்து நிற்பது என்பதும் எங்களுக்குத் தெரியும்.

இவ்வாறு நெதன்யாகு கூறியுள்ளார்.